கால்பந்து உலகக்கோப்பை இன்னும் 3 தினங்களில் தொடங்கவுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றில் ஒரே போட்டியில் அதிக கோல் அடிக்கப்பட்டது, 1954 -ம் ஆண்டு ஆஸ்ட்ரியா மற்றும் சுவிட்சர்லாந்து அணிகள் மோதிய காலிறுதி போட்டியில் தான். மொத்தம் 12 கோல்கள் அடிக்கப்பட்ட இந்தப் போட்டியில் ஆஸ்ட்ரியா 7-5 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது.