பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வீரர்களுக்கு வேகப்பந்து பயிற்சி அளிப்பதற்காக தன்னுடைய காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் மீது அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட முயன்றார். உடனே சுதாரித்துக்கொண்டதால் தோட்டா காரின் மீது பாய்ந்தது. இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.