டிஜிட்டல் பேமென்ட் துறையில் தற்போது சில முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருவது, மிகவும் ஆபத்தான விஷயம் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது. மேலும் டிஜிட்டல் பேமென்ட் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், பரிவர்த்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் சர்வரில் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.