இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் சந்தீப் சிங் வாழ்க்கை வரலாறு படமான `சூர்மா' ட்ரெய்லர் நேற்று முன்தினம் வெளியானது. ட்ரெய்லருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 2 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் இதைப் பார்த்துள்ளனர். இதில், சந்தீப் சிங்காக தில்ஜித் தோசங் நடிக்க, இயக்குநர் ஷாத் அலி இயக்கியுள்ளார்.