இந்திய ஆடவர் ஹாக்கி அணியின் வீரர்களுக்கு பெங்களூரில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதாகப் பயிற்சியாளர் ஹரேந்திர சிங் புகார் தெரிவித்துள்ளார். மேலும் வீரர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் பூச்சி, தலைமுடி போன்றவை இருந்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.