இன்று சிங்கப்பூரில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் -வட கொரிய அதிபர் கிம் ஆகிய இருவரின் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றது. பின்னர் கிம் தொடர்பாக பேசிய அதிபர் ட்ரம்ப், ‘கிம் மிகத் திறமையானவர். அவர் தனது நாட்டை மிகவும் நேசிக்கிறார். நாங்கள் மீண்டும் சந்திப்போம். மீண்டும் மீண்டும் சந்திப்போம்’ என்றார் குதூகலமாக!