வாஜ்பாயின் உடல்நலம் நன்றாக இருக்கிறது. ஆன்டிபயோடிக்ஸ் மருந்துகளை அவரது உடல் ஏற்றுக்கொள்கிறது. ஊசி மூலமாக அவ்வகை மருந்துகள் வாஜ்பாய்க்கு செலுத்தப்படுகின்றன. அவரை ஆய்வு செய்து பார்த்ததில், அவரது உடல்நலம் நன்றாக இருப்பது தெரியவந்தது என எய்ம்ஸ் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.