முதல்வருக்கு எதிராக ஆளுநரிடம் கடிதம் அளித்ததற்காக டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதனை எதிர்த்து அவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் நாளை நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்குகிறது.