ஊட்டி நகராட்சி வணிக வளாகத்தில் 1,619 கடைகள் செயல்படுகின்றன. ஏலம் விடப்பட்டு 9 ஆண்டுகள் நிறைவடைந்த கடைகளுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் புதிய வாடகையை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடை உரிமையாளர்கள் புதிய வாடகை கட்டவில்லை. புதிய வாடகை கட்டவில்லை என்றால் கடைக்கு சீல் வைக்கப்படும் என்று நகராட்சி தெரிவித்துள்ளது.