குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்காததைக் கண்டிக்கும் விதமாக நாகை அருகே மீனம்பநல்லூரில் விவசாயிகள் கிராமத்துக்கு தண்ணீர் கொண்டு வரும் கோட்டூரான் பாசன வாய்க்காலில் மெழுகுவத்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். அதைத்தொடர்ந்து அங்குள்ள பெண்கள் கும்மியடித்தும் ஒப்பாரி வைத்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.