கடலூர் ஆயுதப்படையில் பணிபுரியும் சவிதா அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலைக்கு முயன்றுள்ளார். பணிச்சுமையால் எனது உடல்நிலை சரியில்லாத குழந்தையை கவனிக்க முடியவில்லை. உயரதிகாரியிடம் முறையிட்டால் நீ எப்படி அதிகாரிகளைச் சந்திக்கலாம் எனச் சாதி, மனரீதியாகவும் மன உளைச்சலை ஏற்படுத்தி வருகிறார்கள் என அவர் கடிதம் எழுதியுள்ளார்.