ராமேஸ்வரம் தீவு பகுதியில் இறால் பண்ணைகளை அகற்றுவது தொடர்பாக கோட்டாட்சியர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற கோரி கிராம மக்கள் சங்கு ஊதி காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாலை 5 மணி வரை கோட்டாட்சியர் வராத காரணத்தினால் வட்டாட்சியர் அலுவலகம் முன்  திரண்டு சங்கு ஊதியபடி காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.