அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடி வரும் நியூசிலாந்து பெண்கள் அணி தொடர்ச்சியாக 3 போட்டிகளில் 400-க்கும் அதிகமான ரன்கள் எடுக்கும் அணி என்ற சாதனையைப் படைத்தது. ஆண்கள் சர்வதேச கிரிக்கெட்டிலும் இது நடைபெற்றதில்லை. முதல் போட்டியில் 490 ரன்கள் குவித்த நியூசிலாந்து அணி, 2 மற்றும் 3 போட்டிகளில் முறையே 418 மற்றும் 440 ரன்கள் குவித்தது.