நாகை மாவட்டம், சீர்காழிக்கு அருகே திருநாங்கூரில் உள்ள மதங்கீஸ்வரர் ஆலயத்தில் நேற்று இரவு 12 ரிஷப சேவை வைபவம் நடைபெற்றது. இதில் 12 சிவபெருமான்களுக்கு அவர்களின் தேவிகளுடன் ஒரே நேரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க மதங்கீஸ்வரர் ஆலயத்தில் திருக்கல்யாண திருவிழா நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து ரிஷப வாகனத்தில் வீதியுலா நடைபெற்றது!