18 எம்.எல்.ஏ க்களின் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என்ற நிலையில் செய்தியாளர்களைச்  சந்தித்த தங்கத்தமிழ்ச்செல்வன், ‘நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. எங்களுக்குச் சாதகமான தீர்ப்பு வரும் என நம்புகிறேன். தீர்ப்பு எங்களுக்கு எதிராக வந்தாலும் நான் மேல்முறையீடு செய்யமாட்டேன்’ எனத் தெரிவித்தார்.