டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 18 பேரின் தகுதிநீக்கத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. இந்த வழக்கில்  `நல்லதே நடக்கும்' என அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். மேலும்,  `வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் உள்ளதால் கருத்து சொல்வது சரியாக இருக்காது' என்றார்.