ஜீப் தனது காம்பஸ் எஸ்யூவியின் புதிய லிமிடட் எடிஷன் மாடலான பெட்ராக்கை விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. ரூ.17.53 லட்சம் எனும் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்துள்ள இந்த கார் காம்பஸின் ஸ்போர்ட் வேரியன்ட்டை அடிப்படையாகக் கொண்டது. இந்த எடிஷன், இந்தியாவில் 25,000 காம்பஸ் விற்பனையானதை கொண்டாடுவதற்காக உருவாக்கப்பட்டது.