முருங்கை விதை மற்றும் இலையில் இருந்து எடுக்கப்படும் புரதங்களைக் கொண்டு தண்ணீரைச் சுத்திகரிக்கலாம் என அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள கார்னேஜி மெல்லோன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இதைக் கண்டுபிடித்துள்ளனர். இதனால் ஆர்.ஓ பயன்பாடு தவிர்க்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.