நெல்லையின் அடையாளங்களில் ஒன்றான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் ஆனித் தேர்த்திருவிழாவின் கொடியேற்றம் இன்று நடைபெற்றது. இந்தக் கொடியேற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்துகொண்டு வழிபட்டனர். திருவிழாவையொட்டி வரும் 27-ம் தேதி தேரோட்டம் நடைபெறவுள்ளது.