ஒடிசா மாநிலம், பத்ரக் மாவட்டம் சாம்பூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிஜே புயான். இவரின் வீட்டில் மகள் விளையாடும் அறையிலிருந்து 100-க்கும் மேற்பட்ட நாகப் பாம்புக் குட்டிகள்  இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. குவியல் குவியலாக ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்து, ஊர்வதைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோய் உள்ளனர் கிராம மக்கள்.