நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோயிலின் தேர்த் திருவிழா நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.  தேரோட்டம் காரணமாக நாளை நெல்லை மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டிகளை மாநகராட்சி நிர்வாகம் அமைத்துள்ளது.