15 ஆண்டுகளுக்குப் பிறகு அடுத்த மாதம் செவ்வாய் கிரகம், பூமிக்கு அருகே வரப்போகிறது. இந்த `பெரிஹெலிக் அப்போசிஷன்' என்ற நிகழ்வானது துல்லியமாக வரும் ஜூலை மாதம் 27-ம் தேதி நிகழவிருக்கிறது.  கடந்த 2003ம் ஆண்டு இதே நிகழ்வு நடந்தபோது கடந்த 60,000 ஆண்டுகளில் இல்லாத அளவு செவ்வாயும் பூமியும் அருகில் வந்தன.