தமிழகத்தின் மூன்றாவது பெரிய தேரான நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் தற்போது நடைபெறுகிறது. பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் தேரோட்ட நிகழ்வில் கலந்து கொண்டனர்.  இந்தத் தேர், 4 ரத வீதிகளில் வலம் வரும். பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதால் பாதுகாப்பு பணிகளுக்காக 1,200 காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.