அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்தியப் பணத்தின் மதிப்பு 69 ரூபாயாக சரிந்துள்ளது. 2016, நவம்பர் மாதத்திலிருந்த குறைந்த மதிப்பான 68.73 ரூபாயைவிட தற்போது குறைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, இந்தியாவில் நிரந்தர முதலீடு குறைவது, மோசமான உள்நாட்டுப் பொருளாதாரம் ஆகிவற்றால் பண மதிப்பு குறைகிறது என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.