திருநெல்வேலி நாங்குநேரி பகுதியில் வானமாமலை பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் 108 ஆண்டுகளுக்குப் பிறகு, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், காவிரி, கங்கை, தாமிரபரணி ஆகிய நதிகளின் நீரைக் கொண்டு கோபுர விமானங்களுக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதில் திரளான மக்கள் கலந்துகொண்டனர்.