பிராட்பேண்ட் சேவையில் கால்பதிக்க ரிலையன்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. `ஃபைபர் டூ ஹோம்’(Fiber to the home) எஃப்டிடிஹெச் என்ற பெயரில் பிராட்பேண்ட் சேவையை ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. ஜியோவில் பயன்படுத்திய அதே யுக்திகளை பிராட் பேண்டிலும் கையாளப்போகிறது ரிலையன்ஸ்.