தமிழகத்திலேயே சரஸ்வதி கடவுளுக்கென கூத்தனூரில் சரஸ்வதி அம்மன் கோயில் உள்ளது. அந்தக் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. தொடர்ந்து 8 கால யாக சாலை பூஜைகள் நிறைவடைந்து காலை 9 45 மணி அளவில் வாத்தியங்கள் முழங்க கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.