ஹோண்டா ஆக்டிவா 125 ஸ்கூட்டர் அப்டேட் ஆகிவிட்டது! LED ஹெட்லைட், செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், சர்வீஸ் இன்டிகேட்டர் என ஆக்டிவா 125-ல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அழகுக்கான புதிய மாற்றங்களாக மிட் மற்றும் டாப் வேரியன்டில் கிரே அலாய் வீலும், டாப் வேரியன்டில் கிரோம் muffler cover-ம் சேர்க்கப்பட்டிருக்கிறது.