காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய கீதத்தை அவமதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், சில மாணவர்கள் இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த குற்றச்சாட்டைக் கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளது.