திருவாரூர் தியாகராஜர் கோயிலில், தெப்பத் திருவிழா நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. உலகப் புகழ்பெற்ற திருவாரூர் ஆழித்தேர் திருவிழா, கடந்த மே மாதம் 27 - ம் தேதி நடைபெற்றது. பங்குனி உத்திரப் பெருவிழாவின் நிறைவுத் விழாவான தெப்பத் திருவிழா இப்போது தொடங்கியுள்ளது. ஜூலை 5,6,7 ஆகிய மூன்று நாள்கள் இத்திருவிழா நடக்கவிருக்கிறது.