விபத்தில் சிக்கியதால் ஒரு வாரம் பணிக்கு வராத வாலிபர் ஒருவரை, தூணில் கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார் பெட்ரோல் பங்க் உரிமையாளர். வாலிபரைத் தாக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதையடுத்து இரண்டு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் நடந்துள்ளது.