வாட்ஸ்அப்பில் பரவிய தவறான தகவலால் சிலர் கொல்லப்பட்ட சம்பவங்கள் அரங்கேறின. இதைத் தொடர்ந்து, புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது வாட்ஸ்அப் நிறுவனம். அதன்படி, வாட்ஸ்அப்பில் வெளியாகும் போலிச் செய்திகள், தகவல்களைத் தடுக்க அல்லது கண்டறிய யோசனை கூறுபவர்களுக்கு 50,000 டாலர் பரிசு அறிவித்துள்ளது.