அசாம், ஹஃப்லாங் பகுதியில் குழந்தைகளைக் கடத்தும் கும்பல் முகாமிட்டுள்ளதாகப் போலியான தகவல் வாட்ஸ்அப்பில் பரவியது. இதனால், அப்பகுதியில் காரில் சென்றுகொண்டிருந்த 3 சாமியார்களை வழிமறித்த பொதுமக்கள் அவர்களைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இந்தச் சம்பவம் அறிந்து அங்கு வந்த ராணுவ வீரர்கள் சாமியார்களை மீட்டு போலீஸிடம் ஒப்படைத்தனர்.