தாய்லாந்தில் குகைக்குள் சிக்கிக் கொண்ட இளம் கால்பந்து அணியின் பயிற்சியாளர் சிறுவர்களின் பெற்றோர்களுக்கு எழுதிய கடிதத்தில், `குழந்தைகள் அனைவரும் நலம். அனைவரையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்வேன் என சத்தியம் செய்து தருகிறேன். உங்களின் தார்மிக ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி; என்னை மன்னித்து விடுங்கள் பெற்றோர்களே' எனக் குறிப்பிட்டுள்ளார்.