உலகக் கோப்பைக் கால்பந்துத் தொடரில் காலிறுதிப் போட்டியில் ஸ்வீடன் அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. இங்கிலாந்து அணி தரப்பில், 30வது நிமிடத்தில் ஹேரி மெக்கொயர் மற்றும் 59வது நிமிடத்தில் டெலி அல்லி ஆகியோர் கோல் அடித்தனர். இறுதி வரை ஸ்வீடன் அணியால் கோல் அடிக்க முடியவில்லை.