இந்தியாவில் வருகின்ற 18-ம் தேதியன்று, தனது G310R மற்றும் G310GS பைக்குகளைக் களமிறக்குகிறது பிஎம்டபிள்யூ. இதில் நீல நிறத்துக்குப் பதிலாக, சிவப்பு சேர்க்கப்பட்டுள்ளது; கறுப்பு நிறம் தொடரும் எனத் தெரிகிறது. மற்றபடி மெக்கானிக்கலாக G310R பைக்கில் எந்த மாறுதலும் இல்லை. விலை 3.5 லட்சம் மற்றும் 4 லட்சம் ரூபாயாக இருக்கலாம்.