ராமேஸ்வரம், மண்டபத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் இன்று அதிகாலை சிறை பிடித்து சென்றனர். தடை காலம் முடிந்த சில நாட்களிலேயே, மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்களை அடுத்தடுத்து சிறைபிடித்து செல்லும் இலங்கை கடற்படையினரின் நடவடிக்கைகளால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.