மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற இந்திய மாணவர் சரத் கொப்பு, மர்ம நபர் ஒருவரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மிஸ்ஸோரி பல்கலைக்கழகத்தில் எம்.எஸ் படித்து வந்த அவர், கான்சாஸ் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் பகுதி நேரப் பணியில் சேர்ந்து வேலை செய்து வந்துள்ளார். உணவகத்துக்கு வந்த மர்ம நபர் ஒருவர் அவரை துப்பாகியால் சுட்டுள்ளார்.