இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 3வது டி20 போட்டி பிரிஸ்டோல் நகரில் நடைபெறுகிறது. இரு அணிகளும் தலா  ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில், இந்த போட்டியில் வெல்லும் அணி, தொடரைக் கைப்பற்றும். இந்த போட்டி மூலம் இந்திய அணி வீரர் தீபக் சஹார், சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகிறார்.