இந்திய அணிக்கெதிரான  மூன்றாவது டி20 போட்டியில் இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இங்கிலாந்து தரப்பில் ஜேசன் ராய் 67ரன்களும், பட்லர் 34 ரன்களும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஹர்திக் பாண்டியா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.