இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் சேர்த்தது. இதில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் தோனி, 5 கேட்சுகள் பிடித்தார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டி ஒன்றில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை அவர் படைத்தார்.