இங்கிலாந்து அணிக்கெதிரான மூன்றாவது டி20 போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, தொடரையும் 2-1 என்ற கணக்கில் வென்றது. இங்கிலாந்து நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை 18.4 ஓவர்களில் இந்திய அணி எட்டியது. ரோஹித் ஷர்மா 100 ரன்களும், விராட் கோலி 43 ரன்களும் சேர்த்தனர்.