துருக்கியில் நடைபெற்ற ஜிம்னாஸ்டிக் உலகக் கோப்பை போட்டியில் இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் கலந்துகொண்டார். அவர், 14.15 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கம் வென்றார். அவருக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி ட்விட்டர் பதிவில், 'தீபா கர்மாகரால் இந்தியா பெருமையடைகிறது. அவருக்கு வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார்.