ஜப்பானில் கடந்த சில தினங்களாகக் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, மேற்கு ஜப்பானின் ஒக்காயமா, மபிச்சோ போன்ற இடங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி இதுவரை 100 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 50 பேர் மாயமாகியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.