காலாவுக்கு அடுத்ததாக,  கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் ரஜினிகாந்த். இந்த படத்தின் படப்பிடிப்பு டார்ஜிலிங்கில் நடைபெற்று வருகிறது.  இந்நிலையில் ஓய்வெடுப்பதற்காக நாளை சென்னை திரும்புகிறார் ரஜினி . சிறிது நாள் இங்கிருக்கும் அவர்  ரஜினி மக்கள் மன்றப் பொறுப்பாளர்களுடன் முக்கியமான ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.