டி20 போட்டிகளுக்கான வீரர்களின் தரவரிசைப்பட்டியலில் ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பிஞ்ச் முதல் இடம்பிடித்துள்ளார்.  பாகிஸ்தான் வீரர் பஹார் ஜமான் 2-வது இடம்பிடித்துள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் அதிரடியாக ஆடி, சதம் விளாசிய இந்திய வீரர் கே.எல்.ராகுல் முதல்முறையாக மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.