இந்திய மகளிர் டி20 அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் போலிச் சான்றிதழ் சமர்ப்பித்த குற்றத்துக்காக, அவருக்கு வழங்கப்பட்ட டி.எஸ்.பி பதவியை ரத்து செய்தது பஞ்சாப் அரசு. மேலும், அவர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால், அவர் பெற்ற அர்ஜுனா விருதை இழக்க நேரிடும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.