நடிகர் டி.ராஜேந்தர் நீண்ட நாள்களுக்குப் பின்பு ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளார். இப்படத்துக்கு `இன்றைய காதல் டா' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கதை, திரைக்கதை, இயக்கம், இசை, பாடல் உள்ளிட்ட பணிகளை டி.ராஜேந்தர் கவனிக்க உள்ளார். இதில் நமீதா, ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.