காலா படம் குறித்த விவாத நிகழ்ச்சியில் இந்து கடவுள்கள் ராமர், சீதை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய தெலுங்கு இயக்குநர் கத்தி மகேஷை 6 மாதம் ஹைதராபாத் நகருக்குள் நுழைய தெலங்கானா போலீஸ் தடை விதித்துள்ளது. மேலும், இந்து அமைப்புகள் கொடுத்த புகாரின் பேரில் அவர் மீது 13 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.