தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவதற்கான சட்டம் நேற்று சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கிடையே ``ஊழல் செய்பவர்களை அச்சுறுத்தும் வகையில் புலியாக அமைய வேண்டிய லோக் ஆயுக்தா, ஆட்சியாளர்களைக் கண்டு அஞ்சி ஓடும் எலியாக மாற்றப்பட்டுள்ளது என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கிண்டல் செய்துள்ளார்.